ஜெயிலர் கிளைமாக்ஸில் சென்சார் வெட்டி நீக்கிய காட்சி!
ஜெயிலர் படத்தினை பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் பேசி வருகின்றனர். கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் தற்போது வசூலில் சாதனை படைத்து வருகிறது.
படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த பிறகு தான் இயக்குனர் நெல்சன் தற்போது பல சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் படம் பற்றிய பல்வேறு விஷயங்களை கூறி வருகிறார்.
இந்நிலையில் ஜெயிலர் பட எடிட்டர் நிர்மல் அளித்து இருக்கும் பேட்டியில் கிளைமாக்ஸ் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறி இருக்கிறார்.
தற்போது படத்தில் இருக்கும் கிளைமாக்ஸ் காட்சி முடிந்தபிறகு ஒரு மாஸான சீன் ஒன்று இருந்தது, அதை சென்சாரில் நீக்கிவிட்டார்கள். அது இருந்திருந்தால். 10 நொடிகள் வரும் அந்த காட்சி இருந்திருந்தால் இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் என எடிட்டர் நிர்மல் கூறி இருக்கிறார்.
Leave a comment