2 21
சினிமாசெய்திகள்

அட நடிகை அமலா பாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே… லேட்டஸ்ட் க்ளிக்

Share

அட நடிகை அமலா பாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே… லேட்டஸ்ட் க்ளிக்

மலையாள சினிமாவில் 2009ம் ஆண்டு வெளியான நீலத்தாமரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.

அப்படத்தை தொடர்ந்து தமிழில் வீர சேகரன் என்கிற படத்தில் நடித்தவர் தொடர்ந்து 2010ம் ஆண்டு நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சை நாயகியாக அறியப்பட்டார்.

இந்த படத்திற்கு பிறகு அமலாபாலுக்கு சிறந்த நடிகை என பெயர் வாங்கி கொடுத்தது மைனா படம் தான். அப்பட வெற்றி அவருக்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது.

அப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்திற்கு பின் சில படங்கள் நடித்து வந்தவர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். அண்மையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது, அழகான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது மகனுடன் இணைந்து தீபாவளி ஸ்பெஷலாக அழகிய புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அட நடிகையின் மகனா நன்றாக வளர்ந்து கியூட்டாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

articles2FqpILCUr6EEqQv1X62MFX
சினிமாபொழுதுபோக்கு

டிமான்ட்டி காலனி 3 ஆரம்பம்: மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திகில் திரைப்படமான ‘டிமான்ட்டி...