THUM 6
சினிமாசெய்திகள்

27 ஆண்டுகளுக்கு பின் மருதநாயகம் படத்தை மீண்டும் இயக்கும் கமல் ஹாசன்.. எதிர்ப்பார்பில் ரசிகர்கள்

Share

27 ஆண்டுகளுக்கு பின் மருதநாயகம் படத்தை மீண்டும் இயக்கும் கமல் ஹாசன்.. எதிர்ப்பார்பில் ரசிகர்கள்

கமல் ஹாசனின் கனவு திரைப்படம் மருதநாயகம். Samuel Charles Hill எழுதிய யூசப் கான் புத்தகத்தை 80சதவீதம் தழுவி, கமல் ஹாசன் மற்றும் பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதை தானாம் இது.

இப்படத்தின் துவக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி எலிசபத் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் கனவு படமாக மருதநாயகம் இருந்தாலும், அதனை இதுவரை நம்மால் திரையில் காணமுடியவில்லை.

விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் கூட, மருதநாயகம் படம் மீண்டும் எடுப்பேன், எனக்கு பதிலாக வேறு யாரவது ஹீரோவாக நடிப்பார் என கமல் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படம் மீண்டும் எடுக்க கமல் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு அந்த கதாபாத்திரத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அதற்காக தான் தற்போது வெளிநாட்டில் ஏஐ படித்து வருகிறாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...