சினிமா
இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?
இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் விவாகரத்தை அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். அவர் ஆர்த்தியுடன் 15 வருடங்கள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
சட்டப்படி விவாகரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருந்து தனது கார் உட்பட உடமைகளை மீட்டு தரும்படி அவர் போலீசில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி சென்னையில் இருந்து வெளியேறி மும்பையில் செட்டில் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெயம் ரவி மும்பையில் புதிதாக தனக்கென ஒரு ஆபிஸ் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஹிந்தி படங்களிலும் அவர் நடிக்க வாய்ப்பு தேடுவதாகவும் தகவல் வருகிறது.
சூர்யாவை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயம் ரவியும் மும்பையில் செட்டில் ஆவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.