24 66bb39e6c782f
சினிமா

கல்கி படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் முதலில் இவர் தான் நடிக்கவிருந்தார்.. வெளிப்படையாக கூறிய படக்குழுவினர்!

Share

கல்கி படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் முதலில் இவர் தான் நடிக்கவிருந்தார்.. வெளிப்படையாக கூறிய படக்குழுவினர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் கமல்ஹாசன். இவர் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு வருகிறார்.

இவர் 1959-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.

இவர் வில்லனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் கல்கி 2898 ஏடி. பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1,100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து, தற்போது கல்கி படத்தின் படக்குழு உறுப்பினர் வேணுகோபால் அந்த படத்தை பற்றி ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

அது பற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் அஸ்வத்தாமனாக நடிக்க அமிதாப் பச்சன் மற்றும் கர்ணனாக பிரபாஸ் நடிப்பார்கள் என்பது ஆரம்பத்திலேயே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் யாஸ்கின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது தான் நிச்சயமற்று இருந்தது.

அப்போது இந்த கதாபாத்திரத்திற்கு மோகன்லால் சார் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் அவரை விட யாஸ்கின் கதாபாத்திரத்திற்கு கமல் சார் தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்யப்பட்டது” என்று வெளிப்படையாக கூறினார்.

 

Share
தொடர்புடையது
image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...