தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதை அடுத்து விஜய் உட்பட படக்குழுவினர் திருவனந்தபுரம் செல்ல உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ’கோட்’ படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்று விட்டதை அடுத்து இன்று விஜய் திருவனந்தபுரம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஜய் திருவனந்தபுரம் வருகிறார் என்ற தகவல் அறிந்து கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடி இருப்பதாகவும் ஏராளமான கூட்டம் அங்கு கூடியதை அடுத்து கேரள அரசு தானாகவே முன்வந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப், இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை வரவேற்க யாருமே இல்லை என்றும் ஆனால் தளபதி விஜய்யை வரவேற்க ஏராளமான கூட்டம் கூடி இருப்பதால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்திலும் தளபதி விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் கூடி இருப்பதாகவும் படப்பிடிப்பை பார்ப்பதற்காக வந்த கூட்டத்தை பார்த்து சும்மா அதிருதுல்ல என்ற வசனம் தான் ஞாபகம் வருவதாக கேரள விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஏற்கனவே விஜய் படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்த நிலையில் தற்போது கேரளாவிலும் அவருக்கு கூட்டம் கூடி இருப்பதை பார்க்கும் போது விஜய் ஒரு தென்னிந்திய நடிகர் என்பதை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- breaking news
- cinema
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- hot tamil cinema news
- kapamilya news
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- live news
- News
- pinoy showbiz news
- Shruti Shanmugapriya
- smart cinema news
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil cinema news today
- tamil cinema today news
- tamil live news
- Tamil news
- tamil news today
- today tamil news
- trending news
- vijay
- viral news
Comments are closed.