tamilni 382 scaled
சினிமாசெய்திகள்

சூர்யாவின் ’கங்குவா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டீசரில் இந்த டிவிஸ்ட் இருக்குமா?

Share

சூர்யாவின் ’கங்குவா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டீசரில் இந்த டிவிஸ்ட் இருக்குமா?

சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரில் ஒரு முக்கிய ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் அதன் பின்னர் இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் புதுவையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீட் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ’கங்குவா’ படத்தின் டீசர் வெளியாக இருந்த நிலையில் திடீரென சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவர் காலமானதை அடுத்து டீசர் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ’கங்குவா’ படத்தின் டீசர் நாளை மாலை 4.30 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் டீசர் வெளியாக இருப்பதை அடுத்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த டீசரில் ஒரு டிவிஸ்ட்டாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி தேர்தல் தேதி அறிவிப்புக்காகவே காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் அறிவிக்கப்படும் என்பது சூர்யா ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை வெளியாக இருக்கும் டீசர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...