இந்தியா
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு

நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு
தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவர், நடிகர் விஜயகாந்த் உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன் இதனை தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் உடல்நிலை குறித்து பதிலளித்த அவர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு தான். அவர் பழையபடி பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் அனைவரையும் போல நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு கேப்டன் நன்றாக இருக்கிறார். இந்த உடல்நிலையிலேயே அவர் 100 வயது வரை நன்றாக இருப்பார்.
கேப்டன் மந்திரமான ‘முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது’ என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம்.
என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன் என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login