தொடர்ந்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ள கார்த்தி! வேற லெவல் கதை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்கில் உருவாகவுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு பின் 96 படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மூன்று படங்களை கமிட் செய்து வைத்திருக்கும் கார்த்தியின் ப்ரீ பிசினஸ் மட்டுமே ரூ. 150 கோடிக்கும் மேல் இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படங்கள் மட்டுமின்றி சர்தார் 2 திரைப்படமும் அடுத்ததாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment