Kushboo
இந்தியாசினிமாசெய்திகள்

அடினோ வைரஸ் தாக்கம் – தீவிர காய்ச்சலால் நடிகை குஷ்பு மருத்துவமனையில்!

Share

பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு சிகிச்சை பெற்று வரும் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் தனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் நல்ல ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறது. ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். உடல் நிலை சீராக சிறிது நாட்கள் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்புக்கு அடினோவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை குஷ்புவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#India #Cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...