தமிழ் சினிமாவில் அடுத்த விஜய்யாக இருக்கப்போவது யார்?- அதிரடி பதில் கூறிய திருப்பூர் சுப்ரமணியம்
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நாயகன் நடிகர் விஜய்.
இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள், அதன்படி தற்போது அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தற்போது கட்சியின் பெயரை மட்டுமே அறிவித்துள்ளவர் விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறார்.
இதற்கு இடையில் தான் ஒப்புக்கொண்டுள்ள கோட் மற்றும் விஜய் 69வது படம் என இரண்டு படங்களை வேகமாக நடித்து முடிக்க பிளான் செய்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சப்ரமணியம் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவரிடம், விஜய் 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகும் நிலையில் அவருடைய இடத்தை யார் பிடிப்பார், சிவகார்த்திகேயன் பிடிக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், சிவகார்த்திகேயன் தற்போது ரசிகர்கள் கூட்டத்தை கூட்டலாம், அதேபோல் தனுஷ், சூர்யா உட்பட பலரும் ரசிகர் கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.
ஆனால் ரசிகர் கூட்டத்தை கூட்டுவதால் விஜய்யின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது, விஜய்யின் உயரமே வேறு என பதில் அளித்துள்ளார்.