24 66028f89ad44c
சினிமாபொழுதுபோக்கு

CSK வீரர் உடன் காதலா? பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா சொன்ன பதில்!

Share

CSK வீரர் உடன் காதலா? பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா சொன்ன பதில்!

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வரும் பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற ரோலில் நடித்து வருபவர் நேஹா.

கேரளாவை சேர்ந்த அவர் சின்னத்திரையில் பல தொடர்களில் பள்ளி செல்லும் பெண்ணாக நடித்து இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலிலேயே தற்போது தான் காலேஜுக்கு செல்லும் பெண்ணாக மாறி இருக்கிறார்.

CSK அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் பத்திரனா உடன் நேஹா காதலில் இருப்பதாக கடந்த வருடமே செய்தி பரவியது. அது பற்றி ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டதற்கு ‘எனக்கு கிரிக்கெட் பார்க்கவே தெரியாது. யாராவது அருகில் கமெண்ட்ரி கொடுத்து சொல்லி கொடுத்தால் பார்ப்பேன். ஒருமுறை செட்டில் அருகில் இருந்தவர் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருக்கும்போது பத்திரனா பற்றி கூறினார்.’

‘அவர் இன்ஸ்டா ஸ்டேட்டஸ் போட்டதை நான் ஷேர் செய்தேன். அந்த பதிவுக்கு பிறகு பத்திரனாவை காதலிப்பதாக கிசுகிசு வந்தது. எனக்கும் ஜாலியாக இருந்ததால் விட்டுவிட்டேன். ஆனால் பத்திரனாவை நேரில் பார்த்தது கூட கிடையாது’ என நேஹா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

மேலும் நிஜ வாழ்க்கையில் தான் ஒரு காதல் தோல்வியை சந்தித்ததாகவும், அதனால் வருத்தத்தில் கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறி இருக்கிறார்.

காதல் தோல்விக்கான காரணம் என்ன என்பதை பேட்டியில் வெளிப்படையாக சொன்னால் என் அம்மா பார்த்துவிட்டு உதைப்பார்கள் எனவும் நேஹா குறிப்பிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...