1667975368 1667969125 Ganja STF S
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

கரட் மஞ்சூரியன்

Share

தேவையான பொருட்கள்

கரட் – 1/4 கிலோ (வட்டமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி சாறு – 5 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)
மைதா – 1/4 கப்
சோள மாவ – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி, இட்லி மா பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கரட் துண்டுகளை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறு, சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அடுத்து ஒரு கப்பில் சோள மா சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு, அதனை வாணலியில் ஊற்றி, ஒரு கொதி விட்டு, பின் வறுத்து வைத்துள்ள கேரட் போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, நீரானது சுண்டும் வரை கிளறி இறக்கினால், சுவையான கரட் மஞ்சூரியன் ரெடி!!!

இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சிறிது நேரம் மூடி வைத்து பரிமாறினால், சூப்பராக இருக்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...