விஜய் டிவியில் 100 நாட்களில் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று பிரமாண்டமாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் வந்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையோடு முடிவடையை இருக்கிறது. 100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாகும். ஆனால் அதற்கான சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது வரைக்கும் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வாக்குகளின் அடிப்படையில் அதிரடியான மாற்றம் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா தேர்வாகி இருப்பதாகவும் அவரை தொடர்ந்து ரன்னராக மணி தேர்வாகி இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் மாயா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபோல விஷ்ணு மற்றும் தினேஷ் இருவரும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் முழுக்க ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்திருந்த நிலையில் எல்லா போட்டியாளர்களும் மொத்தமாக அர்ச்சனாவை டார்கெட் செய்து அவரை அழ வைத்து கொண்டிருந்தனர். அதனால் மக்கள் மத்தியில் அர்ச்சனாவுக்கு அதிகமான அனுதாப அலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அரச்சனாவுக்கு சின்னத்திரை மக்களின் மத்தியில் பிரபலம் இருக்கும் நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ பண்ணி வருகிறார்கள். அதுபோல இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவருடைய விளையாட்டுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் அவருக்கு ரசிகர்களின் வாக்குகள் கிடைத்ததா? அல்லது சிலர் குற்றச்சாட்டும் போவது போல அவருக்கு பி ஆர் ஓட்டுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கிறாரா? என்று விவாதம் இப்போது இணையத்தில் வெடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா வெற்றி பெற்று இருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும். அதே நேரத்தில் மாயா அவருக்கு விஜய் டிவி மற்றும் கமல்ஹாசன் அதிகமாக சப்போர்ட் செய்து வருவதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கும் நிலையில் மாயா ஜெயித்தால் அது உண்மையாகி விடும் என்று நினைத்து அர்ச்சனாவை ஜெயிக்க வைத்தார்களா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil live
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil title winner
- bigg boss season 4
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil promo
- bigg boss season 7 tamil today episode
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil 7 promo
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 grand finale
- bigg boss tamil season 7 grand finale promo
- Featured
- kamal haasan
- Tamil
- tamil shows
- tamil tv