10 40
சினிமாபொழுதுபோக்கு

பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறாரா விஷால்.? யாருக்கும் தெரியாத இன்னொரு பக்கம்

Share

பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறாரா விஷால்.? யாருக்கும் தெரியாத இன்னொரு பக்கம்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நாளைய தினம் நடைபெற உள்ளது.

பிக்பாஸ் சீசன் 8ற்கான கிராண்ட் பைனலில் இறுதியாக முத்துக்குமரன், ரயான், விஷால் மற்றும் பவித்ரா, சௌந்தர்யா ஆகிய ஐந்து போட்டியாளர்களும் தேர்வாகியுள்ளனர். இதில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறப் போகின்றார்கள் என்ற ஆவல் அனைவரிடத்திலும் காணப்படுகின்றது. மேலும் இன்றைய தினம் டபுள் எவிக்சன் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்ட விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆகி மீண்டும் உள்ளே வந்த ராணவ், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்.

விஷால் பற்றி முக்கியமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார். அதில் இந்த வயதில் இருந்தே பல உதவிகளை விஷால் செய்து வருவதாகவும், குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைப்பதோடு நிறைய பேருக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்து உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இது எல்லாமே அவர்களுக்கு தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றார் என்று சொல்லியுள்ளார்.

மேலும் ஒரு வருடத்திற்கான படிப்பு செலவு, டிரஸ் செலவு என எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கின்றார் விஷால். இன்னும் இது போன்ற நற்பணிகளை செய்ய வேண்டும் என ராணவ் வாழ்த்தியும் இருந்தார்.

இதன் போது பதில் அளித்த விஷால், ராணவுக்கு நன்றி சொல்லியதோடு, நான் யாருக்கு உதவி செய்கின்றேனோ அவர்களுக்கு இதுவரையில் நான் தான் உதவி செய்கின்றேன் என்பது தெரியாது, தன் வாழ்நாள் முழுவதும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...