பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றுவிட்டது. இப்போது அந்த நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் இன்றுவரை பார்த்து வருவதற்கு ஒரே காரணம் இந்த சீசனிங் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்து கொள்வதற்கு தான் ஆனால் அதுவும் முன்னாடியே முடிவு செய்ய ப்பட்டு விட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
இந்த சீசனில் ஆரம்பத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர்கள் என்றால் அது பிரதீப் மற்றும் ஜோவிகா தான். ஜோவிகா மட்டும் மாயா கூட்டணியில் சேராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ஃபைனலிஸ்ட் கூட்டத்தில் கூட ஒருவராக இருந்திருப்பார். இந்த சீசனில் நிறைய போட்டியாளர்களுக்கு வெளியில் பணம் கொடுத்து ஓட்டு போடுவதற்கும் அவர்களை நல்லவர்கள் போல் சித்தரிப்பதற்கும் நிறைய வேலைகள் நடந்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் இன்றைய கணக்குப்படி 100 போஸ்ட்கள் அர்ச்சனாவை பற்றி பதிவிடப்பட்டால், அதன் இணையாக 50 போஸ்டுகள் மாயாவுக்கு இருக்கிறது. இந்த கூட்டத்தில் மணி, தினேஷ், விஷ்ணு சம்பந்தப்பட்ட கண்டன்டுகள் வெளியில் வருவது என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. விஜய் வர்மா பூகம்பம் டாஸ்க் மூலம் உள்ளே சென்று ஏற்கனவே எடுத்த நல்ல பெயரை மொத்தமாக கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மாயாவை டைட்டில் வின்னர் ஆக்கிவிட முயற்சிகள் நடப்பதாகவும், இந்தியாவை தாண்டி ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து எல்லாம் மாயாவுக்கு ஓட்டுகள் வருகிறது என்று பேசுவதை பார்த்தால் அத்தனையும் மாயா ஸ்குவாட் செய்யும் செட் அப் என்பது நன்றாகவே தெரிகிறது. அதேபோல் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என இன்று வரை நூறு சதவீதம் அடித்து சொல்லப்பட்டாலும், அவரும் வெளியில் பி ஆர் வைத்து தன்னை ப்ரொமோட் செய்தது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.
இத்தனை சூது வேலைகளுக்கு நடுவே உண்மையிலேயே பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்றால் அது பிரதீப் ஆண்டனி தான். எந்த ஒரு பி ஆர் வேலையும் இல்லாமல் மக்களிடையே உண்மையான வரவேற்பை பெற்றவர் பிரதீப் தான். பொதுவாக, ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டால் அவரைப் பற்றி அந்த வாரம் முழுக்க தான் பேசுவார்கள், ஆனால் பிரதீப் இன்றுவரை பேசப்பட்டு வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின் பண்ண வேண்டும் என வெறியோடு விளையாடினார் பிரதீப். இன்று அவர் வெளியேற்றப்பட்டு இருந்தாலும் அந்த நிகழ்ச்சி 100 நாட்களை எட்டி இருக்கும் நிலையிலும் மக்கள் பிரதீப் ஆண்டனியை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இதிலிருந்து உண்மையில் யார் வெற்றியாளர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு சூழ்ச்சி செய்து பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதற்கு உண்மையிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தான் வெட்கப்பட வேண்டும்.
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil promo 1
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 promo 1
- bigg boss tamil season 7 today episode
- bigg boss tamil season 7 today full episode
- bigg boss tamil season 7 today promo 1
- bigg boss unseen tamil season 7