11 22
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸை விட்டு வெளியேற்றப்பட்ட அர்னவ் வாங்கும் மொத்த சம்பளம்! அடேங்கப்பா இவ்வளவா

Share

பிக் பாஸை விட்டு வெளியேற்றப்பட்ட அர்னவ் வாங்கும் மொத்த சம்பளம்! அடேங்கப்பா இவ்வளவா

மிகவும் விறுவிறுப்பாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில் பல ட்விஸ்ட் இருப்பதை வாரம் வாரம் நம்மால் காண முடிகிறது.

பிக் பாஸ் சீசன் 8ல் இரண்டாவது வார எலிமினேஷனில் வெளியேறப்போவது யார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

அர்னவ் எலிமினேஷன் செய்யப்பட்டார் என விஜய் சேதுபதி அறிவித்ததும் சக போட்டியாளரான அன்ஷிதா அர்னவை கட்டிப்பிடித்து கொண்டு நீண்ட நேரம் கதறி அழுதார்.

மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் டிராபியை உடைத்துவிட்டு வெளியே வந்த அர்னவ் பெண்கள் டீமை பாராட்டியும், ஆண்கள் டீமை பார்த்து ஜால்ரா அடிப்பவர்கள் என்றும் கோபத்துடன் அவர்களை திட்டி பேச ஆரம்பித்தார்.

வன்மத்தை கொட்டும் வகையில் அர்னவ் பேசியதால் கடுப்பான விஜய் சேதுபதி “இது அநாகரிக பேச்சு. இந்த இடத்தில் இவ்வாறு பேச கூடாது” என்று அர்னவை எச்சரிக்கை செய்து வெளியே அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வீட்டில் இருந்த அர்னவ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டதாகவும், மொத்தம் 14 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக, ரூ.2.8 – ரூ.3.5 லட்சம் வரை அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
kamal 55 1
பொழுதுபோக்குசினிமா

உலக நாயகன் பெயரையோ, புகைப்படத்தையோ வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது சினிமா வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக...

nayanthara in
பொழுதுபோக்குசினிமா

டொக்சிக் படத்திற்காக யஷ் மற்றும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்ட பிரம்மாண்ட சம்பளம்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் KGF பட புகழ் யஷ் நடிப்பில் படு பிரம்மாண்டமாக தயாராகும் படம்...

Image
பொழுதுபோக்குசினிமா

2-வது பாதியில் ரவி மிரட்டியிருக்கிறார்: பராசக்தி படத்தைப் பார்த்துவிட்டு கெனிஷா நெகிழ்ச்சிப் பேட்டி!

சுதா கொங்கரா இயக்கத்தில், பொங்கல் வெளியீடாக இன்று திரைக்கு வந்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில், நடிகர் ஜெயம்...

G H8X3taYAAnFzC
பொழுதுபோக்குசினிமா

டொக்சிக் படக் காட்சியால் கிளம்பிய சர்ச்சை: விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த இயக்குனர் கீது மோகன்தாஸ்!

கன்னடத் திரையுலகின் ‘ராகிங் ஸ்டார்’ யஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘டொக்சிக்’ (Toxic) படத்தின்...