அர்ச்சனாவின் வெற்றியை ஒண்ணுமில்லாமல் ஆக்க நடக்கும் சதி.. மாயா, பூர்ணிமா கொஞ்சமாச்சும் திருந்துங்க
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகப்போகிறது. மக்கள் எதிர்பார்த்தபடியே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். ஆனால் அவருடைய வெற்றியை ஒண்ணுமே இல்லாமல் ஆக்க சமூக வலைத்தளங்களில் இன்று வரை போராடி வருகிறார்கள். மாயா தான் உண்மையான வெற்றியாளர் என்பது போலவும், அர்ச்சனாவுக்கு ஓட்டுகள் கிடைத்தது எல்லாம் அவருடைய பி ஆர்கள் மூலம் எனவும் இன்றுவரை சித்தரிக்கப்பட்டு வருகிறது.
சரவண விக்ரம், அனன்யா, அக்ஷயா, ஜோவிகா, பூர்ணிமா, நிக்சன் என மாயாவால் பலிக்கிடாக்கப்பட்ட அத்தனை போட்டியாளர்களும் மாயா தான் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என கடைசி வாரத்தில் பார்த்த வேலைகள் சகிக்க முடியாத அளவுக்கு இருந்தது. சரி நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என ஏற்றுக்கொள்ளாமல், அர்ச்சனா எல்லாம் உண்மையா ஜெயிக்கல, எங்க மாயா தான் உண்மையான வின்னர் என மீண்டும் சொம்பு அடிப்பது பார்ப்பதற்கு ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை ஐஷு மட்டும்தான் சரியாகப் புரிந்து கொண்டு அந்தக் கூட்டத்திலிருந்து விலகி இருக்கிறார். அர்ச்சனா வெற்றி பெற்ற போது கூட உண்மையிலேயே மனம் திறந்து அவரை பாராட்டி இருந்தார். ஆனால் கடைசி வாரத்தில் வீட்டிற்குள் கெஸ்ட் ஆக வந்து மாயாவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த முதுகெலும்பு இல்லாத அவருடைய சக தோழர்கள் மற்றும் தோழிகள் வெளியில் போன பிறகு ஏதாவது ஒரு எபிசோடை பார்த்தார்களா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பூர்ணிமா ஏற்கனவே தன்னுடைய விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அன்பை கலந்து, அல்வா கிண்டி ஒரு பதிவை போட்டிருந்தார். சரி இதோடு முடித்துக் கொண்டு வேலையை பார்த்தால் சினிமாவில் ஆவது கொஞ்சம் ஜெயிக்க முடியும். அதெல்லாம் முடியாது மாயாவுக்கு சொம்பு தூக்கி ஆவேன் நான் என சொல்லி ஒரு பதிவை போட்டு மொத்தமாக மீண்டும் வெறுப்புகளை சம்பாதித்து இருக்கிறார்.
பூர்ணிமா அவருடைய பதிவில், பிக் பாஸ் சீசன் 7 ஃபைனல் லிஸ்ட் ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள். முதலில் டைட்டிலை வின் பண்ணிய அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மணி உங்களுடைய நகைச்சுவை திறமை ரொம்பவே நன்றாக இருக்கிறது, அதை நான் நிகழ்ச்சியில் ரசித்திருக்கிறேன். தினேஷ் உங்களுக்கும் என்னுடைய மிகப்பெரிய பாராட்டுக்கள், விஷ்ணு நீங்கள் உண்மையிலேயே ரொம்பவும் உறுதியான போட்டியாளர் என சொல்லி இருக்கிறார்.
போதாது என்று, மாயா நீங்கள்தான் என்னுடைய உண்மையான வெற்றியாளர், நீங்கள் ஒரு போராளி, மற்றவை எல்லாம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம் சொல்லிவிட்டேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று தெரிந்த பிறகும், இன்றுவரை மாயா நீங்கள்தான் உண்மையான வெற்றியாளர் என இவர்கள் அறைகூவல் போடுவது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை தான் குறிக்கிறது.
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil memes
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil title winner
- bigg boss 7 tamil update
- bigg boss 7 tamil winner
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 2024 tamil review
- bigg boss tamil season 7 today full episode
- biggboss season 7 tamil troll
- Tamil
- tamil shows
- tamil tv
- unseen bigg boss 7 tamil
Comments are closed.