யாரு கிசுகிசு பேசுறது? வெளியாகியது பிக்பாஸ் புது ப்ரோமோ!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிக்பாஸ் சீசன் 5 இன் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி தற்போது ரசிகர்களிடையே பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது.
உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்களுக்கு கோடான கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீஸன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது சீஸன் 5 ஆரம்பிப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இரு ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்த விஜய் டிவி தற்போது பிக்பாஸ் 5 இன் மூன்றாவது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
இதில் கமல்ஹாசன் ‘‘பிக்பாஸ் வீட்டில் கிசுகிசு பேசுவது ரொம்ப கஷ்டம் போல. வீட்டுக்குள்ள பேசுற கிசுகிசு யாரும் கேட்கமாட்டாங்கன்னு நினைச்சு பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா உலகமே கேட்டிக்கிட்டு இருக்கும்’’ எனக் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
அத்துடன் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளது.
Leave a comment