பொழுதுபோக்குசினிமா

திருநங்கைகளுடன் களமிறங்கும் பிக்பொஸ் – வெளியாகியது புதிய அப்டேட்

Share
biggbos 5
Share

சமூக வலைத்தளங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இப்போது பேச்சென்றால் அது பிக்பொஸ் சீஸன் 5 பற்றியது தான்.

தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் பிக்பொஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இது வரை நான்கு சீன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது பிக்பொஸ் நிகழ்ச்சி.

இந்த நிலையில், சமீப காலங்களாக பிக்பொஸ் சீஸன் 5 தொடர்பில் பல்வேறு தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. இவை ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் செட் போடும் வேலைகள் முடிந்து விட்டன எனவும், போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதேவேளை கமல்ஹாசனின் ப்ரோமோஷன் ஷூட் தொடர்பான படங்களும் அண்மையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சீஸனிலும் ஒரு புதிய விடயங்களை புகுத்துவது வழமை. இந்த நிலையில் இந்த சீஸனிலும் பல புதிய அம்சங்கள் நிறைந்துள்ளன என கூறப்படுகிறது. போட்டியாளர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சீஸனில் விஜய் டிவி சம்பந்தப்படாத புதிய பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக திருநங்கைகள் கலந்துகொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

mila

முக்கியமாக ஷகிலாவின் மகள் மிளா மற்றும் பிரபல மாடல் நமீதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நட்சத்திரங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் இந்த சீஸனில் பங்குகொள்ள கிட்டத்தட்ட 30 பிரபலங்களிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் போட்டியாளர்கள் தொடர்பான விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுனிதா, கனி, தர்ஷா, மற்றும் மைனா ஆகியோர்கள் மட்டுமே விஜய் டிவியில் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, நிகழ்ச்சியின் ப்ரோமா செப்டம்பர் 2ஆம் வாரமளவில் வெளியாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

biggbos 5 2

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...