சினிமாபொழுதுபோக்கு

ஒரே களேபரம் தான் போங்க…! – பிக்பாஸ் 5 புதிய ப்ரோமோ

Share
Share

பிக்பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப விருந்து கொடுத்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப் பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீஸன் 5 தான்.

இதுவரை 4 சீஸன்கள் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீஸன் தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்து வருகின்றது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், விஜய் தொலைக்காட்சி அடுத்தடுத்து புதிய புதிய ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் கலந்துகொள்ளவுள்ள நட்சத்திரங்கள் தொடர்பில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் சீஸன் 5 இன் புதிய ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது.

 

இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் சமையல் அறையில் தோன்றுகிறார், அங்கு அவர் சமையலில் தாளிக்கும் போது சடசடவென பொரிந்து சுறுசுறுவென வதங்கும், பின் கொதிக்கும், பின்பு பொங்கும், அதன் பின் கருகும், தீயும், ஆவிபறக்கும், தாளிச்சு இறக்கி வைக்கும் வரைக்கும் ஒரே கலவரம் தான் என கமல் விளக்கமளிக்கிறார்.

இந்த நிகழ்வை பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இடம்பெறும் முன்னோட்டமாக கமல் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இத ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...