சருமத்தை அழகுபடுத்த உருளைக்கிழங்கு போதுமே!-

Potatoes

முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கங்களால் பாதிக்கப்படுபவர்கள் கவலைப்படத்தேவையில்லை.

ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.

இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம்.

காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.

BeautyTips

Exit mobile version