முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கு மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.
மாம்பழக் கூழுடன் கடலை மாவு, தேன், அரைத்த பாதாம் சேர்த்தும் பயன்படுத் தலாம்.
ஒரு பவுலில் மாம்பழக்கூழை கொட்டி, அதனுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கூழ் கலவையுடன் பாதாமை அரைத்து சேர்த்து முகத்தில் பூச வேண்டும்.
கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால், சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து பயன்படுத்தலாம்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
#Naturalbeauty
Leave a comment