201809061021279331 black circles under eyes reasons SECVPF
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

இதை செய்தால் போதும் ஒரே வாரத்தில் கருவளையம் மறைந்து, முகம் பொலிவடையும்…!!!

Share

இன்று சமூகத்தில் செல்போன், கணினியை பயன்படுத்தாதோர் யாரும் இல்லை. இவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதனால் பல உபாதைகள் ஏற்படுகின்றதன .

அவ்வாறான உபாதைளில் ஒன்றே கண்களில் வரகூடிய கருவளையம்.

அதிக பெண்கள் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் போக்க அதிக முயற்சிக்களை செய்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.

கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும்.

20181009105700

கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம்.

இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.

eye 1

இதற்கு சரியான  தீர்வுகளாக நாம் பின்வருவனவற்றை பயன்ப்டுத்தலாம்.

சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.

lotus

திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும்.

green tea 1024x768 1

பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.

இன்னும் சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும்.

இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி,

வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும்.

samayam tamil 2

1 1533901972

ஒவ்வொரு கண்ணுக்கும் 10 – 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும்.

தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.

woman touching eyebrow

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...

NTLRG 20251221151537002136
பொழுதுபோக்குசினிமா

2025-ன் டாப் 10 தமிழ் ட்ரெய்லர்கள்: 54 மில்லியன் பார்வைகளுடன் ‘கூலி’ முதலிடம்!

2025-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு பிரம்மாண்டமான ஆண்டாக அமைந்துள்ளது. சூப்பர்ஸ்டார்கள் மற்றும் இளம் நட்சத்திரங்களின்...

ajith racer 2025 10 05 19 53 41
பொழுதுபோக்குசினிமா

அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையை ஆவணப்படமாக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய்!

திரையுலகைத் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களில் (Car Racing) தடம் பதித்து வரும் நடிகர் அஜித்குமாரின்...

image 42fd4006b9
பொழுதுபோக்குசினிமா

விபத்திலும் குறையாத வேகம்: மூளை அதிர்ச்சியையும் மீறி மேடையேறிய நடிகை நோரா ஃபதேஹி!

பாலிவுட்டின் பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி, மும்பையில் நடைபெற்ற இசைத் திருவிழாவிற்குச் செல்லும்...