Darkness in the neck 678768 scaled
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

கழுத்தில் கருமையா? கவலை வேண்டாம்

Share

கழுத்தில் கருமையா? கவலை வேண்டாம்

அதிகமானோருக்கு முகம் அழகாகவும் பிரகாசமாகவும் காணப்பட்டாலும் கழுத்துப் பகுதியில் காணப்படும் கருமையானது அவர்களது அழகையே சீர்குலைத்துவிடும்.

வெயிலில் அதிகமாக அலைவதாலும் நகைகள் அணிவதாலும் கழுத்துப் பகுதி கருமையாகிவிடும்.
ஒருமுறை கருமை தோன்றில் நீக்குவது சிறிது கடினமே. இந்தக் கருமையை வீட்டில் பயன்படுத்தும் பொருள்களை கொண்டே எளிய முறையில் நீக்க முடியும்.

எலுமிச்சை
கருமை நீக்க சிறந்த நிவாரணி எலுமிச்சை. 3 கரண்டி எலுமிச்சை சாறுடன் 1 கரண்டி மஞ்சள் பவுடர் கலந்து இரவு நேரத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் கழுத்து சருமம் நாளடைவில் பளிச்சென்று மாறும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லில் ஏராளமாக சத்துக்கள் நிறைந்துள்ளன. கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் மாற்றத்தை உணர்வீர்கள். தினமும் இரவில் படுக்கும் முன் இவ்வாறு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காண்பீர்.

ஒரேஞ்சு தோல்
ஒரேஞ்சு பழத்தில் உள்ள விற்றமின் சி சரும அழகை மேம்படுத்தக்கூடியது. ஒரேஞ்சு தோலை உலர்த்தி பொடி செய்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி பால் அல்லது தயிர் சேர்த்து கருமைப் பகுதியில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் உண்டாகும்.

பேக்கிங் சோடா
இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் சக்தி பேக்கிங் சோடாவுக்கு உண்டு. ஒரு கரண்டி பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து கழுத்து பகுதி முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் அதிக பலன் உண்டாகும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.

வெள்ளரிக்காய்
செல்களில் உள்ள இறந்த செல்களை நீக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கழுத்தில் தடவி 10 – 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் நீரில் கழுவி வந்தால் கருமை நீங்கும்.

தக்காளி
தக்காளியில் உள்ள மருத்துவ குணம் கருமையை நீக்கக் கூடியது. தக்காளி சாறை எடுத்து கருமை உள்ள இடத்தில் பூசி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.

பப்பாளி
பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தோமானால் கழுத்தில் இருக்கும் கருமை அறவே போய்விடும்.

கோதுமை மா
கோதுமை மாவை வாரத்துக்கு மூன்று முறை வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி நன்கு பசை போல் தடவி முப்பது நிமிடம் கழித்து கழுவ கழுத்தில் ஏற்பட்ட கருமை நீங்கிவிடும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
981220 actress
சினிமாபொழுதுபோக்கு

வாக்காளர் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா பெயர்கள் போலியாகச் சேர்ப்பு: பெரும் சர்ச்சை!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளான சமந்தா மற்றும் தமன்னா ஆகியோரின்...

lokesh Kanagaraj pawan
பொழுதுபோக்குசினிமா

லோகேஷ் கனகராஜ் – பவன் கல்யாண் கூட்டணி? புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப்...

2009697 cinema radhikaapte2
பொழுதுபோக்குசினிமா

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான் பாலிவுட்டில் ‘Vaah! Life Ho...

3 17
சினிமாபொழுதுபோக்கு

இன்று 33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு…

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி கூரேஷ்....