தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.
நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் நேர் மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலை குவித்து வருகிறது.
இந்த நிலையில், படத்தில் இடப்பெற்ற பாடல்களும் வேற லெவலில் சாதனை புரிந்து வருகின்றன. சிறியோர் முதல் பெரியோர் வரை பீஸ்ட் பாடலுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
பீஸ்ட் படத்தில், தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம் கானா என்ற பாடலும் மிகப் பிரேமலமான ஒரு பாடல். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த பாடலை பாடி, அதற்கு நடனமாடிய இரண்டு சிறுவர்களின் வீடியோ தற்போது மிகப்பெருமளவில் வைரலாகி வருகிறது.
தளபதிக்கு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்துத்தரப்பிலும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளமை அமைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சிறார்களின் இந்த வீடியோ தளபதிக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
#cinema
Leave a comment