புதிய லுக்கில் இசைப்புயல் – வைரலாகும் புகைப்படம்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இசைப்புயலை, அவர் அறிமுகமான ரோஜா திரைப்படத்திலிருந்து இன்று வரை மீசை இல்லாமல் தான் அனைவரும் பார்த்திருக்கிறோம். தற்போது அவர் மீசையுடன் காணப்படும் படத்தை தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தான் சூம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன் எனவும், தனது புதிய தோற்றம் எவ்வாறு இருக்கிறது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்லாது, உலகளவில் பிரபலமானவர் இசைப்புயல், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இசைப்புயலுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவதுடன் கமெண்டுகளையும் வாரி இறைத்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் பதிவுசெய்யப்பட்டு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில், சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment