Hair
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுறீங்களா? இதனை தடுக்க இதோ வைத்தியம்

Share

முடி உதிர்வு ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினை.

பெரும்பாலும் இள வயதில் முடி உதிர்வு என்பது மோசமான மன அழுத்தம், மோசமான முடி பராமரிப்பு போன்றவற்றால் நிகழக்கூடியவை.

இவை தற்காலிகமானது என்றாலும் கவலை கொள்ளாமல் சில வழிமுறைகளை கையாண்டால் முடி உதிர்வை தடுக்கலாம்.

தற்போது சில எளிய இயற்கை வழிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

  • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
  • வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
  • முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
  • கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
  • காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
  • தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊற வைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
  • முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.

#hairloss #hairtips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...