தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் இடையழகி சிம்ரன்.
இவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான விஐபி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், உருது என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.
தமிழ் சினிமாவில், விஜய், அஜித், சூர்யா, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந், கமலஹாசன், அர்ஜுன் விஜயகாந்த், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
குறிப்பாக, நேருக்கு நேர், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், ஏழுமலை போன்ற திரைப்படங்களின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார் .
முன்னணி நாயகியாக வலம்வந்த சிம்ரன், கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து நடிப்புக்கு ஒய்வு கொடுத்திருந்தார்.
சிம்ரன் – தீபக் தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிம்ரன் தனது மகன்களுடன் இருக்கும் வீடியோ அவரது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது அது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
#Cinema
1 Comment