download 10 1 10
சினிமாபொழுதுபோக்கு

எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு திருமணம்!

Share

எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு திருமணம்!

தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது. இதனை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்து இருந்தார். சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பி இருக்கிறார் என்றும், திருமண வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 5
பொழுதுபோக்குசினிமா

விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு: நயன்தாராவை இழுத்து விமர்சித்ததால் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த...

13 15
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’: ரவிமோகன் – கங்கனா ரனாவத் கூட்டணியின் பிளாக்பஸ்டர் ரீ-ரிலீஸ்!

இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தாம் தூம்’...

04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...