இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அந்நியன்.
நடிகர் விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தார்.
இதனை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக சங்கர் அண்மையில் அறிவித்திருந்தார்.
சங்கரின் அறிவிப்புக்கு அந்நியன் தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் கடும்எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளதாகவும், தனது அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல், ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கு பதிலளித்து இயக்குநர் சங்கர் “அந்நியன் கதை என்னுடையது. எனவே ஹிந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்றார்.
ஆனாலும் இருவருக்கிடையே மோதல் நீடித்து வருகின்றது.
திரைப்பட வர்த்தக சபையில் அந்நியன் ஹிந்தி ரீமேக்கை தடை செய்ய வேண்டும் என ஒஸ்கார் ரவிச்சந்திரன் புகாரளித்தார்.
இதனால் ரீமேக் வேலைகளை ஆரம்பிப்பது தாமதமானது.
தற்போது அந்நியன் ஹிந்தி ரீமேக்கை சங்கர் கைவிட முடிவு செய்திருப்பதாகவும், அந்த படத்துக்கு பதிலாக வேறு கதையில் ரன்வீர் சிங்கை நடிக்க வைத்து இயக்க சங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் சொன்ன புதிய கதை ரன்வீர் சிங்குக்கும் பிடித்துபோனதாகவும் ஹிந்தி இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
Leave a comment