Untitled 1 9 scaled
சினிமாபொழுதுபோக்கு

இணையத்தில் பட்டைய கிளப்பும் அஜித் புகைப்படங்கள்..!

Share

கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் எனவும் ஆசை நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

அதேபோல், விடாமுயற்சி டைட்டில் டீசர் வெளியான பின்னர் இதுவரை வேறு எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. துணிவு படத்தில் அஜித்தின் கெட்டப்பை எடிட் செய்துள்ள ரசிகர் ஒருவர், அதனை அப்படியே மில்கி கலரில் டிசைன் செய்துள்ளார். வெள்ளை நிற காஸ்ட்யூம், கோல்டன் அசசரிஸ் என படு மிரட்டலாக உருவாகியுள்ளது. இதுவரை அஜித்தை இப்படி ஒரு லுக்கில் யாருமே பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேநேரம் இந்த போஸ்டரை கலாய்த்தும் சிலர் கமெண்ட்ஸ் போட்டுள்ளனர். அதாவது “உண்மயாவே இது அஜித் தானா, பார்க்க சீயான் விக்ரம் மாதிரியே இருக்கு” என ட்ரோல் செய்துள்ளனர். மேலும் விடாமுயற்சி அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர் தான் இப்படி அஜித்தை வைத்து சம்பவம் செய்துள்ளார் எனவும் ஜாலியாக கலாய்த்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...