தமிழில் நடிகர் அஜித்துடன் கடந்த 1999 ஆம் ஆண்டு உன்னை தேடி படம் மூலம் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பின் அடுத்தடுத்து தமிழ் மலையாளம் தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகி நடித்து வந்தார்.
மாளவிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு கர்பமானதை தொடர்ந்து பெரியளவில் திரையில் தோன்றாமல் சில ரோல்களில் மட்டும் நடித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா இப்போது ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் கோல்மால் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
சுமார் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வருகிறார் மாளவிகா என்பது குறிப்பிடத்தக்கது.
பொன் குமரன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
#Cinema
Leave a comment