4
சினிமாபொழுதுபோக்கு

இந்த மனசு தான் எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு.! அஜித் என்ன சொல்லுறாரு பாருங்க

Share

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகின்றார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் செலுத்தி வருகின்றார்.

அஜித் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.

கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார் அஜித். இவர் ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்’ இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றது.

ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

மேலும் தனது காரில் இந்திய சினிமா லோகோவை பொறிக்க உள்ளதாகவும் அஜித் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திரைப்படங்கள் என்றாலும் சரி, கார்பந்தயம் என்றாலும் சரி, எனது கருத்துக்களை ரசிகர்கள் மீது திணிக்க மாட்டேன். அவர்கள் தாங்களாகவே முன்வர வேண்டும் அவர்களுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புவதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...