tamilni 253 scaled
சினிமாபொழுதுபோக்கு

என்றும் இளமை நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Share

என்றும் இளமை நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

என்றும் 16 மார்க்கண்டேயன் என்பது போல் தமிழ் சினிமாவில் வயது ஆனாலும் இளமையாக காணப்படுபவர் நடிகை திரிஷா.

20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார்.

அதிலும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.

மிஸ் சென்னை பட்டம் வென்று பிரபலமானவர் ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் தலை காண்பித்தவர் லேசா லேசா படத்தில் நாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்திலேயே மௌனம் பேசியதே படத்தில் நடிக்க அப்படமும் முதலில் ரிலீஸ் ஆனது.

எனவே நடிகை த்ரிஷாவின் முதல் படம் மௌனம் பேசியதே தான் என கருதப்படுகிறது. பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என தொடர்ந்து நடித்தவர் மன்மதன் அம்பு, தூங்காவனம், பேட்ட ஆகிய படங்களின் மூலம் ரஜினி, கமலுடனும் இணைந்து நடித்தார்.

20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா தெலுங்கிலும் டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ஒரு படத்துக்கு ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதோடு விளம்பர பட்ங்களில் நடிப்பதன் மூலமும் திரிஷா ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டுகிறாராம்.

நடிகை திரிஷா BMW Regal (ஐந்து கோடி ரூபாய்), Benz S Class (80 லட்சம் ரூபாய்), BMW 5 Series (75 லட்சம் ரூபாய்) உள்ளிட்ட சொகுசு கார்களை பயன்படுத்துகிறாராம்.

சென்னையில் ஒரு பிரம்மாண்ட சொகுசு பங்களாவும், ஹைதராபாத்தில் ஒரு சொகுசு பங்களாவும் இருப்பதாக கூறப்படுகிறது.

அவற்றில் சென்னையில் இருக்கும் பங்களாவின் மதிப்பு ரூ. 7 கோடி என்றும் ஹைதராபாத்தில் உள்ள பங்களாவின் மதிப்பு ரூ. 6 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

சினிமாவை தாண்டி வேறு சில தொழில்களையும் செய்துவரும் த்ரிஷா அதன் மூலம் கோடி கோடியாக வருமானம் ஈட்டுகிறாராம்.

இப்படி சினிமா, தொழில் என மொத்தமாக பார்க்கும் போது அவரது சொத்து மதிப்பு ரூ. 100 கோடியில் இருந்து ரூ. 110 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...