நடிகை கெளதமியின் மொத்த சொத்து மதிப்பு
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கெளதமியின் மொத்த சொத்து மதிப்பு

Share

நடிகை கெளதமியின் மொத்த சொத்து மதிப்பு

90களில் தமிழ்த் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை கெளதமி.குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரியான கெளதமி, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என 90களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இன்று தனது 54 வது பிறந்தநாள் கொண்டாடும் கெளதமிக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஒரு நேரத்தில் காஸ்ட்லியான நடிகையாக வலம் வந்த கவுதமி, இன்று பெரியளவில் வருமானம் இல்லாமல் காணப்படுகிறாராம்.

சென்னை, விசாகப்பட்டிணம், ஹைதராபாத் பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளாராம் கெளதமி. இதனுடன் சேர்த்து மொத்தமாக அவரது சொத்து மதிப்பு 50 கோடி வரை தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. 90களில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிய கெளதமி தற்போது 50 கோடி மட்டுமே சொத்துடன் வாழ்ந்து வருவது திரையுலகில் அதிர்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது.

அதேபோல், தற்போது ரேஞ்ச் ரோவர், BMW ரக கார்களை சொந்தமாக பயன்படுத்தி வருகிறாராம். நடிப்பு தவிர காஸ்ட்யூம் டிசைனிங்கிலும் கவனம் செலுத்தி வரும் கெளதமி, அதற்காகவும் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறாராம். அதன்மூலம் மாதம் 5 லட்சம் வரை வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...