சினிமாபொழுதுபோக்கு

நடிகர் சரத்பாபு உயிரிழப்பு வதந்தி!

download 24 1
Share

நடிகர் சரத்பாபு உயிரிழப்பு வதந்தி!

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (71). வயது முதிர்வு, உடல்நலக் குறைவால் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நடிகர் சரத்பாபு உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழ் ஊடகங்களிலும் இதுதொடர்பாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் சரத்பாபு குணமடைந்து வருவதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என நடிகர் சரத்பாபுவின் சகோதரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் சரத்பாபுவின் உதவியாளர் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள தகவலில், நடிகர் சரத்பாபு மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான அனைத்து செய்திகளும் தவறானவை. சரத்பாபு குணமடைந்து வருகிறார்.

அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சரத்பாபு முழுமையாக குணமடைந்து விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார் என்று நான் நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...