இயக்குனர் மோகன் ஜி ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கினார்.
திரையரங்குகளில் ருத்ரதாண்டவம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதமாற்றம், தவறாக பயன்படுத்தப்படும் PCR சட்டம், இளம் தலைமுறையினர் போதை பொருளுக்கு அடிமையாக இருப்பது குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாக ருத்ரதாண்டவம் அமைந்துள்ளது.
சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு பலரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து வரும் நிலையில், நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி படத்தை நேற்று திரையரங்கில் பார்த்தார்.
இந்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட், ஹாலினிக்கு தம்பி முறையாகும்.
ருத்ரதாண்டவம் படம் பார்த்து வீடு ஷாலினி தனது கணவரிடம் படத்தை பற்றி எடுத்து கூறியுள்ளார். இதை கேட்ட நடிகர் அஜித் குமார் உடனே ருத்ரதாண்டவம் படத்தின் இயக்குனர் மோகன் ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்பார்க்காத மோகன் ஜி, சார் ரெம்ப நன்றி சார், நான் எதிர்பார்க்கவே இல்லை என்னை தொலைபேசியில் நீங்க தொடர்பு கொள்வீர்கள் என கூறியபோது, அதிர்ச்சியளிக்கும் விதத்தில், என்ன மோகன் சார் நாம் சேர்ந்து அடுத்த படம் பண்ணுவமோ என அஜித் கேட்க, சார் பண்ணலாம் சார் என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
கதையை தயார் செய்து விட்டு தகவல் சொல்லுமாறும், நேரில் சந்தித்து மேலதிக விடயங்களை பேசுவோம் எனவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
Leave a comment