நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்து 200 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘பீஸ்ட்’ திரைப்படம்.
வெளிவந்த நாள் தொடக்கம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்துக்கு இசையமைத்துள்ளார் அனிருத்.
படம் ஒரு பக்கம் வசூல் சாதனை பொழிந்து வரும் நிலையில், தற்போது சத்தமின்றி இன்னொரு சாதனையையும் புரிந்துள்ளது.
படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் பாடல் வரி வீடியோ வெளியான நிலையில், பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது. குழந்தைகள் முதல் பிரபலங்கள் வரை அனைவர் மத்தியிலும் வேற லெவலில் வைரலாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த பாடல் ஏற்கனவே 6 மில்லியன் லைக்குகள் பெற்று சாதனை புரிந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.
325 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய வீடியோ என்ற பெருமையையும் தற்போது இந்த பாடல் பெற்றுள்ளது.
இந்த தகவலையும் தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#Cinema
Leave a comment