சினிமா
தல வந்தால் தள்ளிபோய் தான் ஆகனும், களமிறங்கும் அஜித்தின் விடாமுயற்சி… ரிலீஸ் தேதியை மாற்றிய டிராகன் படக்குழு
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் படு மாஸாக தயாராகி வந்த படம் டிராகன்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தில் லவ் டுடே பட புகழ் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா என முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்பட 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 21ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாம்.
பிரதீப் ரங்கநாதன் தனது டுவிட்டரில், தல வந்தா தள்ளிபோய் தானே ஆகனும் என டிராகன் புதிய ரிலீஸ் தேதியை பதிவிட்டுள்ளார். அஜித்தின் விடாமுயற்சி பிப்ரவரி மாதம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.