d 6607f042db86d
சினிமாபொழுதுபோக்கு

விஜய் படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் பயந்தாரா? உடனடியாக மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி!

Share

விஜய் படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் பயந்தாரா? உடனடியாக மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி!

தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினி காந்த். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த முன்னணி நடிகரான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தற்போது “தலைவர் 171” படத்தில் நடித்து வருகின்றார்.

லோகேஷ் இயக்கும் திரைப்படம் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு சப்ரைசாக “தலைவர் 171” படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ஏப்ரல் 22 ஆம் திகதி இதன் டைட்டில் அலோன்ட்ஸ்மென் வீடியோவானது வெளியாகும் என்றும்அறிவித்து இருந்தனர்.

ஆனால் இது வேறு திகதியில் வர இருந்ததாகவும் விஜய்யின் பட அப்டேட் அந்த திகதியில் வருவதாலேயே திகதி மாற்றபட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிக்கு சமமாக ஹிட் திரைப்படங்களை கொடுக்க கூடிய நடிகர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இதில் யுவன் மற்றும் விஜய் காம்போ முதல் முறையாக நடக்க உள்ளதால் குறித்த திரைப்படத்திற்க்கு பெரும் எதிர் பார்ப்பு காணப்படுகின்றது. இதனாலேயே இயக்குனரை விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்டு தொல்லை செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய்யின் “கோட்” படத்திற்கான போஸ்டர் ஆனது ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதே திகதியில் “தலைவர் 171” கிளிம்ஸ் வீடியோவும் வெளியாக இருந்தது. ஆனால் விஜய் படத்திற்காக “தலைவர் 171″அப்டேட்டை ஏப்ரல் 22 க்கு மாற்றியுள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
115512447
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் பரபரப்பு: நடிகை மீனாட்சி சவுத்ரி – நடிகர் சுஷாந்த் காதல் கிசுகிசு!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி குறித்து...

25 682abe58c3b41
சினிமாபொழுதுபோக்கு

‘டிராகன்’ புகழ் நடிகை கயாடு லோஹர்: ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் இளம் நடிகை கயாடு லோஹர், தனது முதல் திரைப்படமான ‘டிராகன்’...

25 6932b0d4a8851
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டம்: தனுஷ் பங்கேற்க வாய்ப்பு!

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர்...

20251126110454 amala
சினிமாபொழுதுபோக்கு

நாக சைதன்யா பொறுப்பானவர்”: நாகார்ஜுனா மனைவி அமலா உருக்கம்!

தெலுங்கு திரையுலகின் மூத்த முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான அமலா, நாகார்ஜுனாவின் மூத்த...