tamilni 492 scaled
சினிமாபொழுதுபோக்கு

நஷ்ட ஈடா கேட்குற? த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுக்க திமுகவில் சேரும் ஏ.வி.ராஜூ?

Share

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இதற்கு திரை உலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று திடீரென நடிகை த்ரிஷா, ஏவி ராஜு என்பவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதில் ’ஊடகங்கள் முன்னிலையில் ஏவி ராஜு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் அது மட்டுமின்றி நஷ்ட ஈடும் ஒரு பெரும் தொகையாக கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுவரை த்ரிஷாவின் இந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்காத ஏவி ராஜு தற்போது அதிரடியாக திமுகவின் சேர இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்து விட்டால் த்ரிஷாவிடம் இருந்து வரும் சட்டரீதியான பிரச்சனையை எளிதில் சமாளித்து விடலாம் என்றும் த்ரிஷா உள்பட திரை உலகினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த விஷயத்தில் அடக்கி வாசிப்பார்கள் என்றும் ஏவி ராஜு யோசிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் திமுக அவரை சேர்த்துக் கொள்ளுமா? தனது சக நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை திமுகவில் சேர்க்க உதயநிதி ஒப்புக்கொள்வாரா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். ஆனால் த்ரிஷாவை இப்போதைக்கு அடக்கி வைக்காத திமுகவில் சேர போவதாக தனது ஆதரவாளர்கள் மூலம் வதந்தியை சமூக வலைதளங்கள் மூலம் ஏவி ராஜூ கிளப்பி விடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் எங்கே போய் முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
15384441 newproject97
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் இணையும் எச்.வினோத்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ். உறுதி!

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தனது அடுத்த...

25 694a3cc6694cc
பொழுதுபோக்குசினிமா

படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து ‘கொம்புசீவி: கேப்டன் மகனின் அடுத்த அதிரடி!

மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்...

44528881 6
பொழுதுபோக்குசினிமா

ரிலீஸிற்கு முன்பே சாதனை: ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவு 4 கோடியைக் கடந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின்...

maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...