tamilni 57 scaled
சினிமாபொழுதுபோக்கு

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் சமந்தா

Share

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் சமந்தா

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக தனக்கு பாதிக்கப்பட்டிருந்த மயோசிட்டி என்ற நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஏற்கனவே அவர் நடித்து முடித்து இருந்த ’யசோதா’ ’சாகுந்தலம்’ ’குஷி’ ஆகிய திரைப்படங்கள் தான் வெளியானதே தவிர புதிதாக அவர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் உடல்நலம் தேறி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ’தி பேமிலி மேன் 2’ இயக்குனர் ராஜ் & டி.கே. இயக்கத்தில் உருவாகும் ஒரு வெப் தொடரில் அவர் நடித்து வரும் நிலையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் புஜ்ஜிபாபு இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் தற்போது சமந்தா இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராம்சரண் ராஜாவின் 16-வது படமாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...