tamilni 25 scaled
சினிமாபொழுதுபோக்கு

58 வயது ஹீரோவுக்கு ஜோடியாக போகும் திரிஷா

Share

58 வயது ஹீரோவுக்கு ஜோடியாக போகும் திரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் திரிஷா. அடுத்தடுத்து உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கி வருகிறார். இதனால் திரிஷாவின் மார்கெட் உச்சம் தொட்டுள்ளது. இதனையடுத்து பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் திரிஷா நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் திரிஷா. ரஜினி துவங்கி கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களில் இளவரசி குந்தவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றார்.

இதனை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு விஜய் ஜோடியாக ‘லியோ‘ படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. நீண்ட கேப்பிற்கு விஜய், திரிஷா இருவரையும் ஒன்றாக திரையில் பார்த்த ரசிகர்கள், மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

பொன்னியின் செல்வன், லியோ என அடுத்தடுத்த ஹிட்டுக்களுக்கு பிறகு திரிஷாவின் மார்கெட் உச்சம் தொட்டுள்ளது. இதனையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் ‘ராம்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளர். அத்துடன் நிவின் பாலியுடன் ‘ஐடெண்டிட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணு வரதன் அடுத்ததாக சல்மான் கான் நடிப்பில் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தான் திரிஷாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவிலே இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் தமிழில் அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லியோவில் விஜய் ஜோடியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அஜித்துடன் இணைந்து விடாமுயற்சியில் நடித்து வருகிறார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்திலும் திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...