tamilni 496 scaled
சினிமாபொழுதுபோக்கு

சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா?

Share

சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா?

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். சினிமா வாழ்க்கையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி பல தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றார்.

இவர் தெலுங்கில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘Ye Maaya Chesave’ என்ற படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.

கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். இரு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளாராம் நடிகை சமந்தா.

அதாவது, தற்போது ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத நிலையில் இருக்கிறார் நடிகை சமந்தா.

ஆனாலும், தற்போது பேமிலி மேன் எடுத்த இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. சமந்தாவால் அதில் நடிக்க முடியுமா என இயக்குனர் யோசித்த போது தன்னம்பிக்கையுடன் நடிக்க முன்வந்திருக்கிறார் சமந்தா.

இவ்வாறு படப்பிடிப்பின் காட்சி முடிந்ததும் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டாராம். அதன்பின் அவருக்கு சிகிச்சை செய்துள்ளார்களாம்.

Share
தொடர்புடையது
w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...

lady gaga grammys 2025
பொழுதுபோக்குசினிமா

கிராமி மேடையில் ஜொலித்த லேடி காகா: அப்ரகாடாப்ரா பாடலுக்காக இரு விருதுகளை வென்று சாதனை!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (01) நடைபெற்ற 68-வது கிராமி விருது வழங்கும் விழாவில்,...

AA1PVaJe
பொழுதுபோக்குசினிமா

நாளை உதய்பூரில் ரகசியத் திருமணம்? விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி இணையப்போவதாகத் தகவல்!

தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நாளை...

4952471 3 org Catherine O 27Hara at the 2024 Toronto International Film Festival 1
பொழுதுபோக்குசினிமா

ஹாலிவுட்டில் சோகம்: எம்மி விருது வென்ற மூத்த நடிகை கேத்தரின் ஓ’ஹாரா காலமானார்!

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையும், எம்மி (Emmy) விருது வெற்றியாளருமான கேத்தரின் ஓ’ஹாரா (Catherine O’Hara)...