சினிமா
பிக் பாஸ் கொடுத்த டாஸ்கால் ராணுவ பயிற்சி மையமாக மாறிய பிக் பாஸ் வீடு
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிக் பாஸ் செய்துள்ள சம்பவம் சிறப்பாகவும் தரமாகவும் அமைந்துள்ளது .
பிக் பாஸ் சொல்ல சொல்லியதாக 2 டாஸ்குகளை அர்ச்சனா படிக்கிறார் அதில் முதலாவது டாஸ்க் எதோ ராணுவ பயிற்சி மாறி தெரிகிறது .
பிக் பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டுள்ள அப்ஸ்டகலீல் போட்டியாளர்கள் அனைவரும் கீலே விழாமல் அணைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த முதல் டாஸ்கில் வெற்றி பெரும் நபர்கள் இரண்டாவது டாஸ்கிற்கு முன்னேறலாம் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி முதல் டாஸ்கை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மணி , பூர்ணிமா மற்றும் விஜய் அடுத்த டாஸ்க்கிற்கு முன்னேற அந்த டாஸ்கில் மணி சொதப்புவது போல் தெரிகிறது . ஆனால் அந்த டாஸ்கில் வெற்றி பெற்றது யார் என்று தெரியவில்லை.