Untitled 1 68 scaled
சினிமாபொழுதுபோக்கு

முத்தக் காட்சியால் வாயை டெட்டால் போட்டு கழுவினேன்! பிரபல நடிகை

Share

ஹிந்தியில் 1982ஆம் ஆண்டு வெளியான சாத் சாத் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீனா குப்தா. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் அறிமுகமான அதே வருடத்தில் மொத்தம் ஆறு படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். தொடர்ந்து உத்சவ், லைலா, தானியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். `

இந்நிலையில் நடிகை நீனா குப்தா முதன்முதலாக லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர், “திலீப் தவானுடன் பல வருடங்களுக்கு முன்பு சீரியல் ஒன்றில் நடித்தேன். அதுதான் இந்திய தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு லிப் லாக் இருந்தது. அதை நினைத்து என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

திலீப் என்னுடைய நண்பர் இல்லை. அதேசமயம் தெரிந்தவர்தான். அழகாகவும் இருப்பார்தான். ஆனால் முத்தக் காட்சியில் நடிப்பது பிரச்னை. அதற்கு நான் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தயாராக இல்லை. ரொம்பவே பதற்றமாக இருந்தேன். இருப்பினும் நான் ஒரு நடிகை என்பதால் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன்.

கேமராவின் முன்பு சிலரால் நகைச்சுவை செய்ய முடியாது. அழ முடியாது. அதையெல்லாம் எனது தலையில் ஏற்றிக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன். எனக்கு அதிகம் தெரியாத ஒருவரை முத்தமிடுவது ரொம்பவே கடினமாக இருந்தது. அந்தக் காட்சியில் நடித்து முடித்த பிறகு டெட்டாலை கொண்டு எனது வாயை சுத்தம் செய்தேன்” என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...