jayasri
சினிமாபொழுதுபோக்கு

சுயநினைவை இழந்த பிரபல பாடகி – மருத்துவமனையில் அனுமதி

Share

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர்.

தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சினிமாபொழுதுபோக்கு

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல்!

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ (Durandhar) திரைப்படம், திரைக்கு வந்த...

3659285
சினிமாபொழுதுபோக்கு

எல்லோரையும் தொந்தரவு செய்யாதீர்கள்: மலேசிய கார் ரேஸில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள...

25 681d8a41ab078
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் 173 திரைப்படத்தில் சாய் பல்லவி: ரூ. 15 கோடி வரை சம்பளம்?

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தனித்துவமான நடிகையாகத் திகழும் சாய் பல்லவி, தற்போது சூப்பர் ஸ்டார்...

articles2FNbyigU2XF7PyuYerUv4H
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12ஆம் திகதி வெளியாகிறது!

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ (Vaa Vaathiyaar)...