சினிமா
‘குஷி’ படப்பிடிப்பு – மீண்டும் இணைந்த சமந்தா
The Fighter @Samanthaprabhu2 is back to #Kushi sets@TheDeverakonda @MythriOfficial @HeshamAWMusic musical
— Shiva Nirvana (@ShivaNirvana) March 8, 2023
Everything is going to be beautiful ❤️ pic.twitter.com/TL1VSapWDU
சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஷி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘குஷி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா மீண்டும் இணைந்துள்ளார். இதனை இயக்குனர் ஷிவா நிர்வாணா தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
You must be logged in to post a comment Login