சினிமா
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – வைரலாகும் சமந்தா புகைப்படம்
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னால் மயோசிட்டி சென்ற நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இனி திரை உலகில் நடிக்க மாட்டார் என்றும் திரையுலகில் இருந்து விலகிவிடுவார் என்றும் வதந்திகள் பரவியது. ஆனால் எந்த ஒரு பிரச்சனையையும் தன்னால் எதிர்கொள்ள முடியும் என்று தன்னம்பிக்கையுடன் பினிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து வந்த அவர் அந்த நோயிலிருந்து விடுபட்டுள்ளார்.
அது மட்டும் இன்றி கடந்த சில வாரங்களாக அவர் கடும் உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக்கி உள்ளார் என்பதும் தற்போது அவர் படப்பிடிப்புக்கு செல்லும் அளவிற்கு அவரது உடல்நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ ’பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்துள்ளார் சமந்தா’ போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.